கோவிட்-19 அதிகரிப்புக்கு காரணமான தொழிற்சாலையை மூட கோரிக்கை

9 ஜூலை 2021, 5:50 AM
கோவிட்-19 அதிகரிப்புக்கு காரணமான தொழிற்சாலையை மூட கோரிக்கை

கிள்ளான், ஜூலை 9- கோவிட்-19  நோய்த் தொற்றுப் பரவலுக்கு காரணமாக விளங்கும் தொழிற்சாலையை அமலாக்க அதிகாரிகள் தற்காலிமாக மூட வேண்டும் என்று மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தொழிற்சாலை முக்கிய பங்கினை ஆற்றினாலும் அதனைக் காரணமாக கொண்டு அத்தொழிற்சாலை மீதான நடவடிக்கையை தாமதப்படுத்த முடியாது என்று அவர் சொன்னார்.

தற்காலிக அடிப்படையில் தொழிற்சாலையை மூடும்படி வலியுறுத்துகிறோம். நோய்த் தொற்று சுற்றுவட்டார சமூகத்தில் பரவுவதை தடுப்பதற்காக இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள டோப் கிளோவ் கையுறைத் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு வருகை புரிந்து அதன் நடவடிக்கைகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்ட தொழிற்சாலைகளை காப்பாற்றுவதை விட மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த மாதம் முழுவதும் தொழில் துறைகளை உள்ளடக்கிய 91 விழுக்காட்டு தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.