ECONOMY

சிலாங்கூர், கோலாலம்பூரில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தம்

3 ஜூலை 2021, 1:00 PM
சிலாங்கூர், கோலாலம்பூரில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தம்

கோலாலம்பூர், ஜூலை 3- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்திற்கேற்ப சம்பந்தப்பட்ட பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கட்டுமானப் பணிகளை தொடர்வதற்கு “மிட்டி“ எனப்படும் அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு இதற்கு முன்னர் வழங்கிய அனுமதி நடப்பிலுள்ள கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் செல்லுபடியாகாது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசுப் கூறினார்.

எனினும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த என வகைப்படுத்தப்பட்ட பழுதுபார்ப்பு, சீரமைப்பு மற்றும் மின்கம்பி இணைப்பு பணிகள் முன் பதிவின் அடிப்படையில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

விலக்களிக்கப்பட்ட இத்தகைய பணிகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்டத் தரப்பினர் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் அனுமதி பெறுவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அனைத்து கட்டுமானத் தொழில்துறையினரும் முறையாக பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.