MEDIA STATEMENT

அவை கூடும் தேதியை அறிவிக்காவிட்டால் ஜூலை 19இல் நாடாளுமன்றத்தில் கூடுவோம்- பக்கத்தான் அழைப்பு

2 ஜூலை 2021, 8:19 AM
அவை கூடும் தேதியை அறிவிக்காவிட்டால் ஜூலை 19இல் நாடாளுமன்றத்தில் கூடுவோம்- பக்கத்தான் அழைப்பு

ஷா ஆலம், ஜூலை 2- மக்களவை கூடுவதற்கான தேதியை அரசாங்கம் அறிவிக்காவிட்டால் இம்மாதம் 19ஆம் தேதி  நாடாளுமன்றம் முன் அரசாங்க உறுப்பினர்கள் உள்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுகூட பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்றம் கூடுவதற்கான தேதியை பிரதமர் வரும் திங்கள் கிழமைக்குள் அறிவிக்காவிட்டால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கூட்டணி அறிக்கை ஒன்றில் கூறியது.

மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவை ஏற்கும் வகையிலும் நாடாளுமன்ற ஜனநாயக கோட்பாடுகளுக்கு ஏற்பவும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரும் ஜூலை மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அணி திரள்வோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.