ஷா ஆலம், ஜூன் 21- நாடாளுன்றத்தைக் கூட்டுவதற்கு மத்திய அரசாங்கத்திற்கு 14 நாள் அவகாசத்தை அம்னோ வழங்கியுள்ளது.
நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்ற மாட்சிமை தங்கிய பேரரசரின் உத்தரவுகேற்ப இந்த காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவின் உத்தரவை டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான அரசாங்கம் மதிக்க வேண்டும் என்ற தாங்கள் வலியுறுத்துவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.








