ஷா ஆலம், ஜூன்- நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கேற்ப மாட்சிமை தங்கிய பேரரசர் நேர்மையாகவும் சிறப்பாகவும் ஆட்சியை தொடர்ந்து நடத்த தாங்கள் பிரார்த்திப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் துங் பெர்மைசூரி சிலாங்கூர் தம்பதியர் தெரிவித்துள்ளனர்.
இன்று ஜூன் 7ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவுக்கு தாமும் துங்கு பெர்மைசூரி நோராஷிகினும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக சுல்தான் ஷராபுடின் அல் ஹாஜ் கூறினார்.
மாட்சிமை தங்கிய இளைய சகோத தரர் நீண்ட ஆயுளுடனும் நீடித்த ஆரோக்கியத்துடனும் இறைவனின் அரவணைப்பில் எந்நாளும் இருக்க மூத்த சகோதரராகிய நான் வாழ்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சிக்கலான சூழலில் மாமன்னர் பொறுமை காக்கவும் தாம் இறைவைனை பிரார்த்திப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








