MEDIA STATEMENT

மலேசியாவின் மக்கள் தொகை  32.75 மில்லியனாக உயர்வு

27 மே 2021, 3:52 PM
மலேசியாவின் மக்கள் தொகை  32.75 மில்லியனாக உயர்வு

புத்ரா ஜெயா, மே 27-  2021ஆம் முதல் காலாண்டில் நாட்டின் மக்கள் தொகை 3 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் என மதிப்பிடப்படுகிறது.

கடந்த 2020 முதல் காலாண்டில் பதிவானதை விட இது 0.4  விழுக்காடு அதிகமாகும் என்று மக்கள் தொகை மீதான புள்ளிவிரபத்துறையின் கணக்கெடுப்பு கூறுகிறது.

நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில்  2 கோடியே 99 லட்சத்து 10 ஆயிரம் பேர் அதாவது 91.3 விழுக்காட்டினர் பிரஜைகள் என்றும்  8.7 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 40 ஆயிரம் பேர் அந்நிய  நாட்டினர் என்றும் தேசிய புள்ளி விபரத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்  முகமது உசீர்  மாஹிடின் கூறினார்.

மக்கள் தொகையில் ஆண்கள் பெண்களை விட அதிகமாக அதாவது 1 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரமாக உள்ள வேளையில் பெண்களின் எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரமாக உள்ளது.

இக்காலக்கட்டத்தில் 65 வயதைக் கடந்த முதியோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 60 ஆயிரத்திலிருந்து 23 லட்சத்து 70 ஆயிரமாக உயர்வு கண்டுள்ளது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.