ANTARABANGSA

பாலஸ்தீன மக்களுக்கு மீடியா சிலாங்கூர் நிதி திரட்டுகிறது

23 மே 2021, 7:15 AM
பாலஸ்தீன மக்களுக்கு மீடியா சிலாங்கூர் நிதி திரட்டுகிறது

ஷா ஆலம், மே 23- இஸ்ரேலின்  கோரத்தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு உதவுவதற்காக மீடியா சிலாங்கூர் நிர்வாகம் நிதி திரட்டும் இயக்கத்தை தொடக்கியுள்ளது.

மீடியா சிலாங்கூர் வாயிலாக திரட்டப்படும் நிதி சிலாங்கூர் மாநில அரசு கடந்த மே மாதம் 19ஆம் தேதி ஆரம்பித்த சிலாங்கூர் பரிவுமிக்க மனிதாபிமான நிதித்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

மீடியா சிலாங்கூர் பணியாளர்கள் தங்கள் பங்களிப்பை இணையம் வாயிலாக அல்லது அந்நிறுவனத்தின் நிதிப்பிரிவிரிடம் நேரடியாக இம்மாதம் 30ஆம் தேதிக்குள் வழங்கலாம்.

சிலாங்கூர் மாநில அரசின் அதிகாரத்துவ தகவல் சாதனமான மீடியா சிலாங்கூர் 11 ஆண்டுகளுக்கு முன்னர் கம்யுனிகேஷன்ஸ் கார்ப்ரேஷன் சென்.  பெர்ஹாட் எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

சிலாங்கூர் கினி வாராந்திர பத்திரிகை தவிர்த்து டிவி சிலாங்கூர், மற்றும் இணைய ஊடகத்தையும் இது நடத்தி வருகிறது. இதுதவிர இந்த நிறுவனத்தின் கீழ் ஆங்கில, சீன மற்றும் தமிழ் இணைய மற்றும் அச்சு இதழ்களும் வெளிவருகின்றன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.