MEDIA STATEMENT

கோவிட்-19 எண்ணிக்கை 4,865 ஆக உயர்வு- சிலாங்கூரில் 1,743  நேர்வுகள் பதிவு

18 மே 2021, 9:18 AM
கோவிட்-19 எண்ணிக்கை 4,865 ஆக உயர்வு- சிலாங்கூரில் 1,743  நேர்வுகள் பதிவு

ஷா ஆலம், மே 18- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை இன்று 4,865  ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 4446 ஆக இருந்தது.

நோய்த் தொற்று அதிகம் கொண்ட மாநிலங்களில் சிலாங்கூர் முதலிடம் வகிப்பதாக மலேசிய சுகாதார துறையின் பேஸ்புக் தகவல்  அளிப்பில் வெளியிட்டுள்ளது. 

சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 1,650 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த வேளையில் இன்று  அது 1743 ஆக உயர்வடைந்துள்ளது.அதே  வேளையில் அதற்கு அடுத்த நிலையில்  இருந்த சரவா மாநிலத்திலும் தொற்றுகள் 512 ஆக   உயர்வடைந்துள்ளது, அங்கு நேற்று 433 சம்பவங்கள் மட்டுமே பதிவாகி இருந்ததாக அது தெரிவிக்கிறது.

நேற்று 297 தொற்றுகளுடன்  இருந்து கோலாலம்பூர் இன்று  477 தொற்றுகளுடன்  மூன்றாவது நிலையில்  உள்ளது . ஜொகூர் நேற்று போன்று   407  தொற்றுகளை  கொண்டுள்ளது.  கிளந்தான் (406), கெடா (244)  பினாங்கு 220  சம்பவங்களையும் பகாங் 152 சம்பவங்களையும், மலாக்கா 127 சம்பவங்களையும், சபா 95 சம்பவங்களுடன் தொடர்ந்து  உயர்ந்து வரும் வேளையில்  பேராக் (160), திரங்கானு (156),  நெகிரி செம்பிலான் (149) ஆகிய மூன்று மாநிலங்களில் தொற்றுகள் சற்று குறைந்து  உள்ளன.

எனினும், நேற்று எந்த தொற்றும் பதிவிடாத  லபுவான்  மற்றும் பெர்லிசில் இன்று முறையே  ஆறு மற்றும் இரண்டு  சம்பவம் பதிவாகி  உள்ளன  என்று குறிப்பிட்டுள்ளது அது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.