ACTIVITIES AND ADS

புயலில் பாதிக்கப்பட்ட கம்போங் களும்பாங் மக்களுக்கு உடனடி உதவி

1 மே 2021, 1:40 PM
புயலில் பாதிக்கப்பட்ட கம்போங் களும்பாங் மக்களுக்கு உடனடி உதவி

உலு சிலாகூர், மே 1- இங்கு கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் புயலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  உடனடி நிவாரண நிதியாக 300 வெள்ளியை உலு சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம் வங்கியது.

இச்சம்பவத்தில் கடுமையாகச் சேதமுற்ற  நான்கு வீடுகளை பழுதுபார்ப்பது குறித்து  மந்திரி புசார் கழகத்துடன்  விவாதிக்கும்படி  மாவட்ட நில அலுவலகத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

சி.எஸ்.ஆர். எனப்படும் சமூக கடப்பாட்டுத் திட்டத்தின் கீழ்  இத்தகைய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எம்,பி.ஐ. சிறப்பு நிதி ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வியாழக்கிமை ஏற்பட்ட கடும் புயலில் கம்போங் களும்பாங்கில் உள்ள நான்கு வீடுகள் கடுமையான சேதத்திற்குள்ளாயின.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.