ACTIVITIES AND ADS

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் வசதி குறைந்த 500 பேருக்கு நோன்பு பெருநாள் உதவி

19 ஏப்ரல் 2021, 8:33 AM
செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் வசதி குறைந்த 500 பேருக்கு நோன்பு பெருநாள் உதவி

கிள்ளான், ஏப் 19- நோன்புப் பெருநாளை முன்னிட்டு உதவி பெறக்கூடிய  500 வசதி குறைந்தவர்களை செந்தோசா சட்டமன்றத் தொகுதி அடையாளம் கண்டுள்ளது.

தொகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்கள் வாயிலாக உதவி பெறுவோர் பட்டியல் பெறப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

நோன்புத் துறப்பு உள்ளிட்ட திட்டங்களை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வசதி குறைந்த 500 பேருக்கு மாநில அரசு பற்றுச் சீட்டுகளை வழங்கும் என அவர் சொன்னார்.

உதவி தேவைப்படுவோர் தொகுதி சேவை மையத்தில் தங்கள் பெயரை பதிந்து கொள்ளலாம். தகுதி உள்ளவர்களுக்கு பள்ளிவாசல் மற்றும் சூராவ் நிர்வாகக் குழுவின் வாயிலாக உதவிகள் வழங்கப்படும் என்றார் அவர்.

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.