MEDIA STATEMENT

கோல லங்காட் மாவட்டத்திற்கு மந்திரி புசார் இன்று வருகை

21 மார்ச் 2021, 8:38 AM
கோல லங்காட் மாவட்டத்திற்கு மந்திரி புசார்  இன்று வருகை

கோல லங்காட், மார்ச் 21- மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று கோல லங்காட் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். தனது பயணத்தின் முதல் கட்டமாக அவர் பந்திங் பொது சந்தையில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் அவர் கம்போங் ஸ்ரீ ஜூக்ராவில் உள்ள கிராமத் தலைவர் இல்லத்தில்  வட்டாரத் தலைவர்களுடன் காலை சிற்றுண்டி அருந்தினார். கம்போங் பண்டார் சுல்தான் அலாட்டின் அரச பள்ளிவாசலுக்கு வருகை மேற்கொண்ட அவர், பத்தாயிரம் வெள்ளி பெறுமானமுள்ள உதவிகளை  அங்கு வழங்கினார்.

தனது பயணத்தின் அடுத்த கட்டமாக அவர் கிளானாங் படகுத் துறையில் சிறிது நேரத்தை செலவிடப்பட்டார். அங்கு 50 மீனவர்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கினார்.

பிறகு, டுசுன் டுரியான் தோட்ட ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலயத்திற்கு வருகை புரிந்த அவர்,   கைவிடப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டம் தொடர்பான பிரச்சனையைக் கேட்டறிந்தார். ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் நடைபெற்ற கோல லங்காட் கெஅடிலான் கட்சியின் தலைவர்களுடனான மதிய விருந்து நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.