MEDIA STATEMENT

கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் 70 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனை

11 பிப்ரவரி 2021, 12:21 PM
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் 70 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், பிப் 11-  கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி சுற்றுவட்டார மக்களுக்கு 70 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்கிறது.

இத்தகைய பரிசோதனையின் வழி கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கட்டுப்படுத்தும் அதேவேளையில்  மக்களின் சுமையையும்  குறைக்கவும் இயலும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

நான்கு தனியார் கிளினிக்குகளின் ஒத்துழைப்புடன்  மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனை இயக்கம் இன்று தொடங்கி இம்மாதம் 28 ஆம் தேதி வரை காலை மணி 10.00 முதல் மாலை 5.00 நடைபெறும் என்று அவர் சொன்னார்.

இதற்கு முன்னர், பல சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றை தடுக்கும் முயற்சியாக இத்தகைய கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களை மேற்கொண்டுள்ளனர்.

கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட கிளினிக்குகளை அணுகலாம்.

1.Klinik Metro

No 31, Jalan Anggerik Vanilla, Kota Kemuning,

40460 Shah Alam, Selangor

03-5131 3459

2.Klinik dan Surgeri Berjaya Park

No 39-G, Jalan Sungai Rasau,

F 32/F Berjaya Park, Seksyen 32,

40460 Shah Alam, Selangor.

03-5888 9938

3.Klinik Pro Medic

40, Jalan Anggerik Vanilla M 31/M, Kota Kemuning,

40460 Shah Alam, Selangor

03-5131 1101

4. Poliklinik Shaik

36-1, No, 8, Jln Anggerik Vanilla BE 31/BE, Kota Kemuning,

40460 Shah Alam, Selangor

03-5122 9030

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.