ACTIVITIES AND ADS

பேறு குறைந்த நால்வருக்கு சக்கர நாற்காலிகள்- ரோட்சியா இஸ்மாயில் வழங்கினார்

8 பிப்ரவரி 2021, 12:03 PM
பேறு குறைந்த நால்வருக்கு சக்கர நாற்காலிகள்- ரோட்சியா இஸ்மாயில் வழங்கினார்

ஷா ஆலம், பிப் 8- பத்து தீகா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த உடல் குறைபாடுடைய நால்வருக்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் சக்கர நாற்காலிகள் வழங்கினார்.

நோயினால் கால்கள் இழப்பு உள்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளவர்கள் ஓரளவு நடமாடும் வகையில் இந்த சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவதாக ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

சம்பந்தப்பட்ட நோயாளிகளின் நிலைமை என்னை மிகவும் வேதனையைடைச் செய்தது. ஆகவே, அவர்களுக்கு சக்கர நாற்காலியும் சிறிது ரொக்கத் தொகையும் வழங்க முன்வந்துள்ளோம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

பத்து தீகா மக்களின் நலன் தொடர்ந்து காக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இது போன்ற உதவித் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.