ACTIVITIES AND ADS

நாட்டில் 5,725 - சிலாங்கூரில் 3,126 புதிய உச்சம் தொட்டது கோவிட்-19 எண்ணிக்கை

29 ஜனவரி 2021, 3:12 PM
நாட்டில் 5,725 - சிலாங்கூரில் 3,126  புதிய உச்சம் தொட்டது கோவிட்-19 எண்ணிக்கை

கோலாலம்பூர், ஜன 29- நாட்டில் இன்று கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,725ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட வேளையில் சிலாங்கூரில் இன்று அதிகப்பட்சமாக 3,126 சம்பவங்கள் பதிவாகின.

தனது டிவிட்டர் பதவில் இன்றைய கோவிட்-19 நோய் தொடர்பான விபரங்களை சுருக்கமாக வெளியிட்ட சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டில் இந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை முதன் முறையாக ஐயாயிரத்தை தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நோய்த் தொற்று காரணமாக இன்று 16 மரணச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 1,577 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 687 சம்பவங்களுடன் கோலாலம்பூரும் 684 சம்பவங்களுடன் ஜோகூரும் உள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.