ACTIVITIES AND ADS

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் புதன் கிழமை முக்கிய அறிவிப்பு- மந்திரி புசார் வெளியிடுவார்

18 ஜனவரி 2021, 7:10 AM
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் புதன் கிழமை முக்கிய அறிவிப்பு- மந்திரி புசார் வெளியிடுவார்

ஷா ஆலம், ஜன 18- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரும் புதன் கிழமையன்று தனது முக நூல் வழி முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் புதன் கிழமை காலை 11.00 மணிக்கு எனது முக நூல் வாயிலாக சிலாங்கூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பினை செய்யவிருக்கிறேன் என்று அவர் கூறினார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட போது 12 கோடியே 77 லட்சத்து 80 வெள்ளி மதிப்பிலான சிலாங்கூர் மாநில பொருளாதார மீட்சித் திட்டத்தை மந்திரி புசார் வெளியிட்டிருந்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று முன்களப் பணியாளர்கள், உயர்கல்விக்கூட மாணவர்கள், வணிகர்கள், சிறு வியாபாரிகள், ஹிஜ்ரா தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏழு தரப்பினரை அந்த உதவித் திட்ட தொகுப்பு உள்ளடக்கியிருந்தது.

இரண்டாம் கட்டமாக கோவிட்-19 மீட்சி நடவடிக்கைகளுக்காக கடந்தாண்டு ஏப்ரல் 20ஆம் தேதி 27 கோடியே 25 லட்சம் மதிப்பிலான உதவித் திட்டத்தை  மந்திரி புசார் அறிவித்தார்.

வகைyb activities

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.