ACTIVITIES AND ADS

இன்று நாட்டில் 4,029 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- எண்மர் மரணம்

16 ஜனவரி 2021, 12:23 PM
இன்று நாட்டில் 4,029 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- எண்மர் மரணம்

கோலாலம்பூர், ஜன 16- நாட்டில்  இன்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 4.029 ஆக உயர்வு கண்டது.

சிலாங்கூர் மாநிலம் 1,466 சம்பவங்களுடன் முதலிடம் வகிக்கும் வேளையில் 719 சம்பவங்களுடன் ஜோகூரும் 449 சம்பவங்களுடன் சபாவும் 347 சம்பவங்களுடன்  கோலாலம்பூரும் 214  சம்பவங்களுடன் நெகிரி செம்பிலானும் உள்ளன. இன்று பதிவு செய்யப்பட்ட மரண எண்ணிக்கை எட்டு ஆகும்.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் நோய்த் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 155,095 ஆக உயர்வு கணடுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர்  டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா

கூறினார்.

நோய்த் தொற்று தீவிரமாக உள்ளவர்களின் எண்ணிக்கை 37,126ஆக உள்ள வேளையில் 205 தீவிர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர். 79 பேருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

இன்று 2,148 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக கூறிய அவர், இதன் வழி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 117,375 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.