ACTIVITIES AND ADS

சுங்கை காண்டீஸ் தொகுதியிலுள்ள 80 குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்கள் அன்பளிப்பு

15 ஜனவரி 2021, 12:45 PM
சுங்கை காண்டீஸ் தொகுதியிலுள்ள 80 குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்கள் அன்பளிப்பு

 

ஷா ஆலம், ஜன 15- பொங்கல் திருநாளை முன்னிட்டு சுங்கை காண்டீஸ் தொகுதியைச் சேர்ந்த 80 பேருக்கு பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன.

சுமார் ஐம்பது வெள்ளி மதிப்பிலான பொங்கல் பானை, பால், சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்ட பொருள்களை அவர்கள் பெற்றுக் கொண்டதாக சுங்கை காண்டீஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாவி அகமது முக்னி கூறினார்.

இந்த உதவிப் பொருள் வழங்கும் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் ஏற்படக்கூடிய நிதிச்சுமையை ஓரளவு குறைக்க இத்திட்டம் உதவி புரியும் எனத் தாம்  நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் நடமாடும் தொகுதி சேவை மையத் திட்டத்தை அமல்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கிள்ளான், பண்டார் புத்ராவில் உள்ள தொகுதி அலுவலகத்திற்கு வருவதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடமாடும் சேவை மையத்தை உருவாக்குவதில் தாங்கள் முனைப்பு காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.