ALAM SEKITAR & CUACA

பாயா ஜெராஸ் தொகுதியிலுள்ள 3,000 ஏழை மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு

10 ஜனவரி 2021, 12:59 PM
பாயா ஜெராஸ் தொகுதியிலுள்ள 3,000 ஏழை மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு

ஷா ஆலம், ஜன 10-  பாயா ஜெராஸ் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த 3,000 இடைநிலை மற்றும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

2021ஆம் ஆண்டிற்கான பள்ளி தவணையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் இயக்கத்தின் கீழ் இந்த பள்ளி உபகரணங்கள் வழங்கப்படுவதாக பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

பள்ளிச் சீருடைகள், காலணி, காலுறை, முகக் கவசம், புத்தகப் பை ஆகிய பொருள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறிய அவர், இந்நோக்கத்திற்காக மூன்று லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினருக்கு குறிப்பாக கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது எனவும் அவர் சொன்னார்.

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.