SELANGOR

கோவிட்-19 அதிகம் உள்ள இடங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை- மந்திரி புசார் பரிந்துரை

25 நவம்பர் 2020, 3:27 PM
கோவிட்-19 அதிகம் உள்ள இடங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை- மந்திரி புசார் பரிந்துரை

ஷா ஆலம், நவ 25- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் உள்ள இடங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பிறப்பிக்க சிலாங்கூர் அரசு பரிந்துரைத்துள்ளது.

கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வரக்கூடிய பகுதிகளில் கிள்ளான், டோப் கிளோவ் தொழிற்சாலையின் ஊழியர்கள் குடியிருப்பில் அமல்படுத்தப்பட்டதைப் போல் பொது முடக்கத்தை கட்டங் கட்டமாக அமல்படுத்தலாம் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டிய இரு இரு இடங்களை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலம் நேற்று மிக அதிகமாக 1,623 கோவிட்-19 சம்பவங்களை பதிவு செய்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.