ஷா ஆலம், அக் 19- நீர் விநியோகத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பயனீட்டாளர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் நீர் விநியோகத்தை முழுமையாக பெறுவர் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.நீர் தூய்மைக்கேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களும் சில மணி நேரத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அவர் சொன்னார்.
அடுத்த 24 மணி நேரத்தில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும். இதற்கிடையில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் லோரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் செய்து வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், லோரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத்தில் மருத்துவமனைகள் மற்றும் டயாலிசிஸ் மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
சுங்கை சிலாங்கூர் இரண்டாம் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு வருகை புரிந்த போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஆயர் சிலாங்கூர் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் ஆற்று நீரில் வாடை கலந்துள்ளதை கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய அவர், மூன்று தொழிற்சாலை பகுதிகளிலிருந்து அந்த கலவை நீரில் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது என்றார்.
SELANGOR
நீர் விநியோகம் 24 மணி நேரத்தில் வழக்க நிலைக்கு திரும்பும் அமைச்சர் அறிவிப்பு
19 அக்டோபர் 2020, 11:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ஷா ஆலாம் உட்பட 21 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை
Media Selangor Team
21 செப்டெம்பர் 2026

selangor
புகைமூட்டம்: மாணவர்களுக்கு மறுபயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்க மாநில அரசு பரிசீலனை
Sheeda Fathil
18 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் தொழில்முனைவோருக்கு 48 மணி நேரத்திற்குள் RM10,000 வரை நிதியுதவி
Media Selangor Team
18 செப்டெம்பர் 2026

selangor
புகைமூட்டம்: சிலாங்கூரில் 6 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை
Media Selangor Team
18 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



