ALAM SEKITAR & CUACA

கோவிட்-19; மக்களின் மனநல ஆரோக்கியம் மீது தீவிர கவனம்

10 அக்டோபர் 2020, 1:13 PM
கோவிட்-19; மக்களின் மனநல ஆரோக்கியம் மீது தீவிர கவனம்

ஷா ஆலம், அக் 10-  கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பை எதிர் நோக்கியிருக்கும் இவ்வேளையில் பொது மக்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும்

நடவடிக்கைகளில் மனநல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மனநல ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை

வலுப்படுத்தும் நோக்கில் மனநல நிர்வாகத் திட்டத்தை இயங்கலை வாயிலாக மாநில

அரசு மேற்கொண்டு வருவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த ஏப்ரல் முதல் தேதி அறிவிக்கப்பட்ட பரிவுமிக்க சிலாங்கூர் பொருளாதார மீட்சி திட்டத்தில் மனநலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு ஆலோசக சேவை வழங்க பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இன்று அனுசரிக்கப்படும் உலக மனநல தினத்தை முன்னிட்டு வழங்கிய செய்தியில்

அவர் இதனைத் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.