கோலாலம்பூர், அக் 6- கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு வெளிப்படையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றுவதில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கக்கூடாது என்பதோடு சட்ட அமலாக்கத்திலும் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் அவர் கூறினார்.
இந்நோய் பரவல் தொடர்பில் ஊகங்களும் வதந்திகளும் பரப்பப் படுவதை தவிக்க அரசாங்கம் இதுகுறித்த தகவல்களை வழங்க வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.
பிரச்சனையான காலகட்டத்தில் மக்கள் நலன்களைக் காப்பதில் இரு தரப்பையும் சேர்ந்த அரசியல்வாதிகளும் தலைமைத்துவ மாண்பை வெளிப்படுத்துவது அவசியம்
என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒன்று பட்டும் உத்தரவுகளை பின்பற்றியும் நடப்பதன் வாயிலாக மட்டுமே பெருந் தொற்றிலிருந்து விடுபட்டு சுபிட்சமான நாடாக ஆக முடியும் என அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் விரைவில் குணமடைய தாம் இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் சொன்னார்.
NATIONAL
கோவிட்-19 நோயைத் தடுக்க கடுமையான சட்ட அமலாக்கம் தேவை டத்தோ ஸ்ரீ அன்வார் வலியுறுத்து
6 அக்டோபர் 2020, 7:52 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தில் பல இனச் சமயம் உட்பட இதர துறைகளின் நிபுணர்களும் இடம்பெற வேண்டும்.
n.pakiya
17 அக்டோபர் 2020

உங்கள் கருத்து என்ன?




