NATIONAL

சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கமா? அது பொய்ச் செய்தி -நம்பாதீர்கள்!

3 அக்டோபர் 2020, 8:22 AM
சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கமா?  அது பொய்ச் செய்தி -நம்பாதீர்கள்!

கோலாலம்பூர், அக் 3-  இம்மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநரை மேற்கோள் காட்டி சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு தெளிவு படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்கள் வழி பரப்பப்பட்டு வரும் அந்த தகவலை சுகாதார அமைச்சு மறுத்துள்ள-தாக இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு கூறியது.

அந்த செய்தி பொய்யானது  என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ள நிலையில்  அச்-செய்தியை பரப்பவோ பகிரவோ வேண்டாம் என்று பொது மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.