SELANGOR

கோவிட்-19: சிலாங்கூரில் நான்கு மாவட்டங்கள் மஞ்சள் மண்டலங்களாக அறிவிப்பு

24 செப்டெம்பர் 2020, 10:30 AM
கோவிட்-19: சிலாங்கூரில் நான்கு மாவட்டங்கள் மஞ்சள் மண்டலங்களாக அறிவிப்பு

ஷா ஆலம், செப் 24- கோவிட்-19 நோய்த் தொற்றின் எதிரொலியாக உலு லங்காட், பெட்டாலிங், சிப்பாங் ஆகிய மாவட்டங்களை அடுத்து கிள்ளானும் மஞ்சள் மண்டல பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் மாவட்டத்தில் இரு கோவிட்-19 சம்பவங்கள் பதிவான வேளையில் உலு லங்காட், சிப்பாங் மற்றும் கிள்ளானில் தலா ஒரு சம்பவம் கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில நடவடிக்கை அறை கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது. சிலாங்கூர் மொத்தம் 2,217 பேர் இந்நோயினால் பிடிக்கப்பட்ட வேளையில் 1,916 பேர் குணமடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 24 ஆகும்.

சிலாங்கூரில் நேற்று இருவருக்கு இந்நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணியிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஒருவருக்கு இந்நோய்க்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது. மற்றொரு நோயாளி சபா மாநிலம் சென்று வந்தவர் ஆவார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.