ஷா ஆலம், செப் 21- கடலில் எழும் உயர் அலைகள் காரணமாக கரையோரப் பகுதிகளில் நீர்ப் பெருக்கு ஏற்படுவதை தவிர்க்க வடிகால் மற்றும் ஆறுகள் மீது ஆய்வுமேற்கொள்ளும்படி கிள்ளான் நகராண்மைக் கழகமும் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத்துறையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
கடல் சீற்றம் காரணமாக பல பகுதிகளில் தடுப்பணை உடைந்து கடல் நீர் குடியிருப்பு
பகுதிகளில் நுழைந்ததாக கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் எஜமான் ஹூரி கூறினார்.
கம்போங் பெண்டாமார், தாமான் தெலுக் காடோங் இண்டா, கோலக் கிள்ளான் ஆகிய பகுதிகளில் கடல் நீர் அதிகளவில் புகுந்ததாக அவர் சொன்னார்.
இது போன்ற பிரச்சினைகள் இனியும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய தடுப்பணையை சீர் செய்வது உள்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும்படி தாம் கிள்ளான் நகராண்மைக் கழகம் மற்றும் வடிகால் நீர்ப்பாசனத்துறையை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
NATIONAL
கடல் பெருக்கு: வடிகால்கள் மீது ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை
21 செப்டெம்பர் 2020, 7:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தில் பல இனச் சமயம் உட்பட இதர துறைகளின் நிபுணர்களும் இடம்பெற வேண்டும்.
n.pakiya
17 அக்டோபர் 2020

உங்கள் கருத்து என்ன?




