SELANGOR

இளம் சட்டமன்ற உறுப்பினராக 56 மாணவர்கள் தேர்வு

19 செப்டெம்பர் 2020, 6:19 AM
இளம் சட்டமன்ற உறுப்பினராக  56 மாணவர்கள் தேர்வு

ஷா ஆலம், செப் 19- சிலாங்கூர் மாநிலத்தின் 2020ஆம் ஆண்டிற்கான மெய்நிகர் இளம் சட்டமன்ற உறுப்பினர் திட்டத்திற்கு 15 வயது மாணவர் உள்பட 56 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தில் 39 ஆண்களும் 17 பெண்களும் இடம் பெற்றுள்ளதாக மாநில சட்டமன்ற

சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.

பதினேழு வயது முதல் முப்பத்தோரு வயது வரையிலான அந்த இளம் உறுப்பினர்கள்

வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பர் என்று அவர் சொன்னார்.

வாக்களிக்கும் வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு நிர்வாகம் குறித்து இளம் வயதிலேயே அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இடைநிலைபள்ளி மாணவர்களையும் இத்திட்டத்தில் சேர்ப்பது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர் காலத்தில் தலைவர்களாக உருவாகக் கூடிய இளையோரை இப்போது தொடங்கி மெருகூட்டுவது அவசியம் எனக் கூறிய அவர், தங்கள் கருத்துக்களை எடுத்து கூறக் கூடிய வாய்ப்பை இந்த நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு வழங்கும் என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.