SELANGOR

பத்து கேவ்ஸ், இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பு பிரச்சினைக்கு அடுத்தாண்டிற்குள் தீர்வு

17 செப்டெம்பர் 2020, 6:52 AM
பத்து கேவ்ஸ், இந்தியன்   செட்டில்மெண்ட் குடியிருப்பு பிரச்சினைக்கு அடுத்தாண்டிற்குள் தீர்வு

கோம்பாக், செப் 17- பத்து கேவ்ஸ்,இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பைச் சேர்ந்த 25 குடும்பங்களை மறு குடியேற்றம் செய்யும் பணிகள் அடுத்தாண்டிற்குள் முற்றுப் பெறும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வெள்ளத் தடுப்பு பணிக்காக நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு அப்பகுதி மக்களின் ஒப்புதல் பெறப்பட்டதைத் தொடர்ந்து இந்த மறுகுடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஆற்றோரத்தில் குடியிருக்கும் மக்களை ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டபடி இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு வாக்கில் வேறு இடத்திற்கு மறு குடியேற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

மலேசிய தினத்தை முன்னிட்டு இங்குள்ள இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பு பகுதியில் துப்புரவு இயக்கத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.