SELANGOR

சிலாங்கூர் இன்று  குறித்த ஆலோசனை கூட்டம்

11 செப்டெம்பர் 2020, 2:42 PM
சிலாங்கூர் இன்று  குறித்த ஆலோசனை கூட்டம்
சிலாங்கூர் இன்று  குறித்த ஆலோசனை கூட்டம்

ஷா ஆலம்-நேற்று மாலை 10/9/2020 ல் மீடியா சிலாங்கூரின் துணை நிர்வாகி  ஜஸ்டின் ராஜ் தலைமையில், மாநில அரசின் பிரச்சார ஊடகமான சிலாங்கூர் இன்றின் படைப்புகளிலும் அதன் விநியோகத்திலும் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைச் சரி செய்யும் வண்ணம் எல்லாக் கட்சிகளிலுமிருந்து இந்தியச் சமுதாயத் தலைவர்கள் மற்றும் நகராண்மைக்கழக உறுப்பினர்களுடன் ஷா ஆலம் பேங் ராயாட் கட்டடத்திலுள்ள மீடியா  சிலாங்கூர் அலுவலகத்தில்  ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வழங்கிய பரிந்துரைகள் படி இன்னும் இரண்டு வாரங்களில் ''சிலாங்கூர் இன்று'' தமிழ்ப்பதிப்பினை கொண்டு வருவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில்  ஜ.செ.க நகராண்மை கழக உறுப்பினர்களைப் பிரதிநிதித்து ஷா ஆலம் மாநகராட்சி  உறுப்பினர் திரு. பாபா ராயுடுவும்,  கெஅடிலான் கட்சியைப் பிரதிநிதித்து பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி உறுப்பினர் திரு. சுரேஸ் கங்கையா  பார்ட்டி அமானாவை பிரதிநிதித்து கிள்ளான்  நகராண்மைக்கழக உறுப்பினர் திரு. சுந்தரம் சுப்பிரமணியம் மற்றும் ஏற்பாட்டு குழுவைப் பிரதிநிதித்து ஷா ஆலம் மாநகராட்சி உறுப்பினர் திரு. சரவணன் மற்றும் சிலாங்கூர் மாநில இந்தியச் சமூகத் தலைவர்களைப் பிரதிநிதித்து திரு. இராசேந்திரன் ராசப்பன் அவருடன் பலக்கோங் இந்தியச் சமூகத் தலைவர் திரு. கிறிஸ்டி லுயிஸ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளை வழங்கினர்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.