SELANGOR

டிங்கில் பூர்வக்குடி கிராமங்களுக்கு சூரிய சக்தி சாலை விளக்குகள்

9 செப்டெம்பர் 2020, 11:15 AM
டிங்கில் பூர்வக்குடி கிராமங்களுக்கு சூரிய சக்தி சாலை விளக்குகள்

சிப்பாங், செப் 9 இங்குள்ள மூன்று பூர்வக்குடி கிராமங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் சாலை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கம்போங் ஜம்பு, கெலிங்சிங், பாக்குக் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 240 குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர்.

இரவு வேளைகளில் விளக்கின்றி பெரும் சிரமத்தை எதிர்நோக்கிய காரணத்தால் சாலை விளக்குகளை பொருத்தும்படி தாங்கள் நீண்ட  நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த தாக கிராமத் தலைவர் அபோய் அனாக் புடி கூறினார்.

பிரதான சாலையில் தற்போது  சூரிய சக்தியால் இயங்கும் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இரவு வேளைகளில் சாலை பிரகாசமாக காட்சியளிப்பதால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதும் எளிதானதாக ஆகிவிட்டது என்றார் அவர்.

பசுமைத் தொழில்நுட்பத்திற்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சீயான் கடந்த மாதம் 28ஆம் தேதி சூரிய சக்தி விளக்குகளைப் பொருத்தும் பணியைத் தொடக்கி வைத்தார்.

இந்த பூர்வக்குடி குடியிருப்புப் பகுதியில் 90 சூரிய சக்தி சாலை விளக்குகளை பொருத்த மூன்று லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

 

 

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.