NATIONAL

தரமான படைப்புகளைத் தருவீர்! இயங்கு படத் தயாரிப்பாளர்களுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்

8 செப்டெம்பர் 2020, 8:42 AM
தரமான படைப்புகளைத் தருவீர்! இயங்கு படத் தயாரிப்பாளர்களுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், செப் 8-  அனிமேஷன் எனப்படும் இயங்கு படத் தயாரிப்பாளர்கள் தரமான படைப்புகளைத் தர வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

இத்தகைய படைப்புகள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஆக்ககரமான பங்களிப்பை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கலைத்துறையை முக்கியமற்ற துறையாக கருதப்படுவதை தவிர்ப்பதற்கு அத்துறை மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைவரும் படைப்புகளை வெளியிடுகிறார்கள். ஆனால், பின்னர் காணாமல் போய் விடுகிறார்கள். படைப்புகளில் வளமான மேம்பாடும் புதிய சிந்தனைகளை கொண்ட ஆக்கத் திறனும் இருப்பதில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டுக்கு மையத்தில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான கலந்துரையாடலில் உரையாற்றிய போது அமிருடின் இதனை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.