SELANGOR

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் உதவி

6 செப்டெம்பர் 2020, 10:27 AM
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் உதவி

ஷா ஆலம், செப் 6- பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்குக் கின்றாரா

சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் உடனடி உதவிகளைச் செய்வதற்கான

ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

பூச்சோங், தாமான் கின்றாரா, செக்சன் 4 உள்ள பங்லீமா அடுக்குமாடி குடியிருப்பைச்

சேர்ந்த அந்த மூதாட்டிக்குப் பெரியவர்களுக்கான பெம்பர்ஸ், நீரிழிவு நோய்க்கான ஊசி,

சாய்வு நாற்காலி போன்ற பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும்

பொருள்கள் அடுத்த வாரம் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியை நான் நேரில் சென்று கண்டு நலம்

விசாரித்தேன். அவருக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்யத் தயாராக உள்ளேன்

என்று தனது டியூட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தாமான் கின்றாராவில் உள்ள பொதுமக்களுக்கு நீரைப் பகிர்ந்தளிக்கும் போது அந்த

மூதாட்டியின் நிலை குறித்துத் தமக்குத் தெரிய வந்த தாக இங் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.