SELANGOR

மெனாரா பேங்க் ராக்யாட் கட்டிடத்திற்கு இடம் மாறுகிறது மீடியா சிலாங்கூர்

3 செப்டெம்பர் 2020, 3:29 PM
மெனாரா பேங்க் ராக்யாட் கட்டிடத்திற்கு இடம் மாறுகிறது மீடியா சிலாங்கூர்

ஷா ஆலம், செப் 3-  சிலாங்கூர் கினி மற்றும் டிவி சிலாங்கூரின் தயாரிப்பு நிறுவனமான மீடியா சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் இங்குள்ள மெனாரா பேங்க் ராக்யாட் கட்டிடத்திற்கு இடம் மாறியுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளாகச் செக் ஷன் 13இல் இயங்கி வந்த இந்நிறுவனம் எண்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்களின் இட வசதியைக் கருத்தில் கொண்டு இம்மாதம் முதல் தேதி புதிய இடத்திற்கு மாற்றலாகியுள்ளது.

சிலாங்கூர் அரசின் தகவல்களை மக்களிடம் சேர்க்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் நிறுவனமான மீடியா சிலாங்கூர், பணியாளர்கள் மத்தியில் நிபுணத்துவத்தையும் உகந்த வேலைச் சூழலையும் ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்திற்கு மறுதோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும்  இலக்கவியலை இலக்காகக் கொண்ட நடவடிக்கையாகவும் இந்த இட மாற்றம் அமைவதாக அதன் தலைமைச் செயல் முறை அதிகாரி முகமது பாரிட் முகமது அஸ்ரி கூறினார்.

பத்தாயிரம் சதுர அடி பரப்பளவிலான இந்த அலுவலகம் ஒளிபரப்புக் கூடம், மாநாட்டு அறை, செய்தி அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது,

மாநில அரசின் பிரசாரக் கருவியாகச் செயல்படும் நோக்கில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் முன்பு கார்ப்பரேஷன் கம்யூனிகேஷன் சென். பெர்ஹாட் என அழைக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் பெயர் மாற்றம் பெற்ற இந்நிறுவனம், புதிய சின்னத்தையும் பெற்றது. நிறுவனத்தின் தோற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு தயாரிப்பு பிரிவும் தனித்தனிச் சின்னத்தைக் கொண்டிருக்கும்.

சிலாங்கூர் கினி வாராந்திர பதிப்பு மற்றும் டிவி சிலாங்கூர் இணையத் தொலைக்காட்சி தவிர்த்துத் தமிழ், மாண்டரின் மற்றும் ஆங்கிலப் பதிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

சிலாங்கூர் கினி பத்திரிகையை selangorkini.my வாயிலாகவும் டிவி சிலாங்கூரை selangorTV.my வாயிலாகவும் ஆங்கிலப் பதிப்பான சிலாங்கூர் ஜர்னல் இதழை selangorjournal.my வாயிலாகவும் மாண்டரின் பத்திரிகையை selangorkini.my/zh-hans/ வாயிலாகவும் சிலாங்கூர் இன்று தமிழ் பத்திரிகையை selangorkini.my/ta/ வாயிலாகவும் இணையத்தில் படிக்கலாம்.

எங்கள் அலுவலகத்தின் புதிய முகவரி

Media Selangor Sdn Bhd,

Aras 11, Menara Bank Rakyat,

No.1, Jalan Indah 14/8 Seksyen 14,

40000 Shah Alam, Selangor

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.