PBT

காஜாங் நகராண்மைக் கழகத்தின் அபராதத் தொகையைக் குறைக்கும் இயக்கம் நீட்டிப்பு

2 செப்டெம்பர் 2020, 3:18 PM
காஜாங் நகராண்மைக் கழகத்தின்  அபராதத் தொகையைக் குறைக்கும் இயக்கம் நீட்டிப்பு

ஷா ஆலம், செப் 3- வாகன நிறுத்துமிட அபராதத் தொகையைக் குறைப்பதற்கான இயக்கத்தைக் காஜாங் நீட்டித்துள்ளது. 20 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அந்த அபராதத் தொகையைச் செலுத்துவதற்குச் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினத்துடன் முடிவடைந்திருக்கக் கூடிய இந்த இயக்கம் காஜாங் வட்டார மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நீட்டிக்கப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகத் தலைவர் ஜூல்கிப்ளி காலிட் கூறினார்.

கோவிட்-19 நோய் தொற்று காரணமாகக் கடுமையான பொருளாதாரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வாகனமோட்டிகளின் சுமையை ஓரளவு குறைக்கும் வகையில் இவ்வியக்கம் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.