SELANGOR

சரவணன் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினரானர்

1 செப்டெம்பர் 2020, 3:09 PM
சரவணன் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினரானர்

ஷா ஆலம், கெஅடிலான் கட்சியின் ஷா ஆலம் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவரும் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு ஆட்சி மன்ற உறுப்பினருமான சரவணன் செல்வராஜூ இன்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினராக நியமனம் பெற்றார்.

இன்று ஷா ஆலம் மாநகர் மன்றத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் டத்தோ பண்டார் டத்தோ ஹரிஸ் காசிம் முன்னிலையில் அவர் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

தமக்கு இப்பதவி வழங்கப்பட்டதானது கட்சியின் இளைஞர் பிரிவுக்கும் சமுதாயத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகத் தாம் கருதுவதாகச் சரவணன் குறிப்பிட்டார்.

நகர்ப்புற மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் நகர்ப்புற விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தப் பதவி பெரிதும் உதவும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

தம் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவிக்குச் சிபாரிசு செய்த மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி மற்றும் செனட்டர் யாக்கோப் சபாரிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.