SELANGOR

பிளஸ் நெடுஞ்சாலையின் காஜாங் நுழைவுப் பாதை பராமரிப்பு பணிக்காக மூடப்படும்

1 செப்டெம்பர் 2020, 2:05 PM
பிளஸ் நெடுஞ்சாலையின் காஜாங் நுழைவுப் பாதை  பராமரிப்பு பணிக்காக மூடப்படும்
பிளஸ் நெடுஞ்சாலையின் காஜாங் நுழைவுப் பாதை  பராமரிப்பு பணிக்காக மூடப்படும்

ஷா ஆலம், செப் 1- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் காஜாங் மற்றும் பாங்கி செல்வதற்கான அடுக்குச் சந்திப்பு பராமரிப்பு பணிகளுக்காக இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வரை இரவு மணி 10.00 தொடங்கி அதிகாலை 5.00 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படும்.

சாலைப் பராமரிப்பு மற்றும் அப்பகுதியிலுள்ள பெரிய மரங்களைச் சிறப்பு இயந்திரங்களைக் கொண்டு வெட்டி அகற்றுவது ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நுழைவுப் பாதை மூடப்படுவதாகப் பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

தெற்கிலிருந்து அல்லது பாங்கியிலிருந்து காஜாங் செல்ல விரும்புவோர் பாங்கி அல்லது யுபிஎம் டோல் சாவடிகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.