RENCANA PILIHAN

மந்திரி பெசார் கோலா லங்காட் மக்களுடன் களம் இறங்கினார் !!!

25 ஜூலை 2020, 9:36 AM
மந்திரி பெசார் கோலா லங்காட் மக்களுடன் களம் இறங்கினார் !!!
மந்திரி பெசார் கோலா லங்காட் மக்களுடன் களம் இறங்கினார் !!!

கோலா லங்காட், ஜூலை 25:

சிஜங்காங் பகுதியில் மக்களோடு மக்களாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி களம் இறங்கி உரையாடினார். மக்கள் நீதிக் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோலா லங்காட் பகுதிக்கு வருகை புரிந்த மந்திரி பெசார் காலை உணவு அருந்தி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பிறகு, நோயால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களை சென்று கண்டு நிதி உதவி செய்தார்.

 

 

 

 

 

 

" இன்று தற்செயலாக கோலா லங்காட்டில் நிகழ்ச்சி இருந்தது. அதனால், இப்பகுதி மக்களுடன் கலந்துரையாட வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. இதன் மூலம் இப்பகுதியில் வாழும் மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள முடிந்தது. கோலா லங்காட் மாவட்டம் மிக வேகமாக மேம்பாடு அடைந்து வரும் பகுதி ஆகும். இங்கு, சில காகிதங்கள் தயாரிக்கும் சீன நாட்டு நிறுவனங்கள் செயல் பட்டு வருகிறது," என்று செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.