NATIONAL

பாக்காத்தான்: 1எம்டிபி பணம் திருப்பி கொடுத்தது, தவறு நடந்துள்ளதை நிரூபித்துள்ளது !!!

25 ஜூலை 2020, 3:01 AM
பாக்காத்தான்: 1எம்டிபி பணம் திருப்பி கொடுத்தது, தவறு நடந்துள்ளதை நிரூபித்துள்ளது !!!

ஷா ஆலம், ஜூலை 25:

கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் ரிம 16.6 பில்லியன் அல்லது 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 1எம்டிபி பணத்தை திருப்பி கொடுத்த நடவடிக்கை தவறு நடந்துள்ளதை நிரூபித்துள்ளது என பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2018-இல் தேசிய முன்னணி அரசாங்கம் வீழ்ந்த நிலையில் இது வரையில் ரிம 19 பில்லியன் பணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

" 1எம்டிபி நிறுவனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இது வரையில் எந்த ஒரு நீதியும் கிடைக்கவில்லை. இது தொடர்ந்து கடைசி வரையில் நீடிக்க வேண்டும். பாக்காத்தான் தலைவர்கள் மன்றம், இந்த வேளையில் நாட்டின் அட்டர்னி ஜெனரல் மற்றும் இந்த பணத்தை திருப்பி கொண்டு வர பாடுபட்ட அனைவருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு மற்றும் ஜனநாயக செயல்கட்சியின் ஜனநாயக செயல்கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக கையொப்பம் இட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.