RENCANA PILIHAN

குடிநீர் கட்டண உயர்வு இல்லை- மந்திரி பெசார்

21 ஜூலை 2020, 9:58 AM
குடிநீர் கட்டண உயர்வு இல்லை- மந்திரி பெசார்

ஷா ஆலம், ஜூலை 21:

கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மக்களின் சுமையைக் குறைக்க குடிநீர் கட்டணத்தை உயர்த்தாது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இக்கட்டான சூழ்நிலையில் குடிநீர் கட்டணம் உயர்வு தேவையில்லை என இன்று மாநில தலைமையகத்தில் நடைபெற்ற ரைட் திட்டத்தை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.

சுற்று சூழல் மற்றும் நீர் வள அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் அறிக்கையை மேற்கோள்காட்டி அமிருடின் ஷாரி விளக்கம் தந்துள்ளார். இதனிடையே, அமிருடின் மாநில அரசாங்கம் தங்களது வியாபார மற்றும் நிதிநிலை வியூகத்தை நீர் வள நிர்வாக நிறுவனம் மற்றும் தேசிய நீர் சேவை ஆணையத்திடம் சமர்ப்பித்து விட்டதாக விவரித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.