SELANGOR

துணைச் சபாநாயகராக மொரிப் சட்டமன்ற உறுப்பினர் !!!

13 ஜூலை 2020, 2:55 AM
துணைச் சபாநாயகராக மொரிப் சட்டமன்ற உறுப்பினர் !!!
துணைச் சபாநாயகராக மொரிப் சட்டமன்ற உறுப்பினர் !!!

ஷா ஆலம், ஜூலை 13:

சிலாங்கூர் மாநில புதிய துணைச் சபாநாயகராக மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹாஸ்நூல் பஹாரூடின் இன்று  தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு இருந்த செமந்தா சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் டாக்டர் டாரோயா அல்வி பதவியை துறந்த நிலையில், ஹாஸ்நூல் இந்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார்.  இவரின் நியமனத்தை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சட்ட மன்ற கூட்டத்தில் அறிவித்தார்.

பதவிப் பிரமாணம் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் எங் சுவி லிம் முன்னிலையில் நடைபெற்றது. இன்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத் தொடர் எதிர் வரும் ஜூலை 24 வரை தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADUN Morib, Hasnul Baharuddin mengangkat sumpah Timbalan Speaker Dewan Negeri Selangor ketika Persidangan Dewan Negeri Selangor pada 13 Julai 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.