NATIONAL

பெல்ஜியம் நாட்டு கால்பந்து கிளப்பில் இணையும் லுக்மான், நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்- மந்திரி பெசார்

5 ஜூலை 2020, 7:05 AM
பெல்ஜியம் நாட்டு கால்பந்து கிளப்பில் இணையும் லுக்மான், நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்- மந்திரி பெசார்

ஷா ஆலம், ஜூலை 5:

பெல்ஜியம் நாட்டு முதல் டிவிஷன் கிளப்பான கெவி கோர்த்ரிஜிக் அணியில் இணைந்து விளையாட இருக்கும் சிலாங்கூர் மாநில கால்பந்து வீரர் லுக்மான் ஹாகிம் சம்சுடினுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். நாட்டின் இளம் முன்னணி ஆட்டக்காரரான லுக்மான் மலேசிய மண்ணிற்கு நற்பெயர் எடுத்துக் கொடுப்பார் என நம்பிக்கை கூறினார்.

" தம்பி லுக்மான் ஹாகிம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். கால்பந்து உலகில் மேலும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்," என தமது டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார். நேற்று, சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கம், லுக்மான் ஹாகிம் புதிய கிளப்பான கெவி கோர்த்ரிஜிக் அணியில் இணைவதை உறுதிப் படுத்தியது. இதன் மூலம் தொழில்முறையில் விளையாடி மேலும் சிறந்த ஒரு நிலைக்கு செல்ல லுக்மானுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.