RENCANA PILIHAN

லெஸ்தாரி புத்ரா அடுக்குமாடி வீடுகளை வாங்கியவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சாவிகள் கிடைக்கும் !!!

3 ஜூலை 2020, 4:51 AM
லெஸ்தாரி புத்ரா அடுக்குமாடி வீடுகளை வாங்கியவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சாவிகள் கிடைக்கும் !!!

ஷா ஆலம், ஜூலை 3:

பூச்சோங் லெஸ்தாரி புத்ரா அடுக்குமாடி வீடுகளை வாங்கியவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சாவிகள் கிடைக்கும் என சிலாங்கூர் மாநில வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹானிஸா தல்ஹா தெரிவித்தார். கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட நிலையில் இருந்த இந்த வீடமைப்பு திட்டம் திவால் ஆகிய மேம்பாட்டு நிறுவனத்தால் நின்று போனது என்றும் இதில் 360 வீடுகள் அடங்கும் என்றார் அவர்.

" இந்த வீடுகளின் சாவிகள் கிடைக்கும் போது உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். நீண்ட காலமாக இதற்கு காத்துக் கொண்டிருந்தனர்," என்று முகநூலில் பதிவு செய்தார். இந்த வீடமைப்பு திட்டத்தை மறுசீரமைப்பு செய்த நிறுவனம் மற்றும் அடிப்படை வசதிகளை நிர்மாணிக்கும் நிறுவனம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடியிருக்கும் தகுதிச் சான்றிதழ் கிடைக்க உதவியதாக ஹானிஸா தல்ஹா தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.