RENCANA PILIHAN

சட்டமன்றத்தில் பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் தாக்கல் செய்யப்படும் !!!

27 ஜூன் 2020, 11:30 AM
சட்டமன்றத்தில் பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் தாக்கல் செய்யப்படும் !!!
சட்டமன்றத்தில் பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் தாக்கல் செய்யப்படும் !!!

கோம்பாக், ஜூன் 27:

எதிர் வரும் ஜூலை 13-இல் இடம் பெறவிருக்கும் சிலாங்கூர் மாநில சட்டசபை கூட்டத்தில் மிதமான பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த ஊக்குவிப்பு திட்டத்தில்; கோவிட்-19 தாக்கத்தினால் துவண்டு போயுள்ள மாநில பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்யும் வகையில் ஆறு மாத காலகட்டத்திற்கு வரையறுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

" மாநில சட்டமன்றத்திற்கு இது தொடர்பாக தெரிவிப்பேன். பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்யும் வகையில் ஆறு மாத காலகட்டத்தில் இது திட்டமிடப்படும். இது மட்டுமின்றி, சிலாங்கூர் மாநில அரசாங்க நிர்வாகத்தில் அடைந்த வெற்றிகளை பறைசாற்றும் விதமாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறேன்," என்று இன்று சுங்கை துவா சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிரூடின் ஷாரி பேசினார்.

 

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.