NATIONAL

எஸ்ஓபியை பின்பற்றி நடப்பது குறைந்துள்ளது; அலட்சியமாக இருக்காதீர்கள்- சுகாதார அமைச்சு

26 ஜூன் 2020, 4:43 AM
எஸ்ஓபியை பின்பற்றி நடப்பது குறைந்துள்ளது; அலட்சியமாக இருக்காதீர்கள்- சுகாதார அமைச்சு

ஷா ஆலம், ஜூன் 25:

மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபிபி) அமல்படுத்தியதிலிருந்து சீரான செயலாக்க  நடைமுறைகளை (எஸ்ஓபி) பொதுமக்கள் பின்பற்றி வருவது குறைந்து வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பல வணிக வளாகங்களும், நிறுவனம் பொருத்தமற்ற முறையில் செயல்பட்டு வருவதாகவும் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

" எஸ்ஓபிகளும் புதிய விதிமுறைகளும் கோவிட் -19 பரவுவுதலை தடுப்பதற்காக ஒரு தேசிய பாதுகாப்பு அமைப்பாக அரசாங்கத்தால் பெரும்பாலும் வலியுறுத்தப்படுகின்றன. இதுபோன்று, சுகாதார அமைச்சும் (எம்ஓஎச்) பொதுமக்களை அலட்சியமாக  செயல்படக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளோம். இந்த புதிய நடைைமுறைகள  எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தொற்று நோய்ச் சங்கிலியை உடைக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் தொடரும் என்று சுகாதார அமைச்சு  நம்புவதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார். சமீபத்தில், புக்கிட் புரோகாவிற்கு வரும்  பார்வையாளர்களின் வருகை அதிகரித்து  வந்துள்ளதை மேற்கோள்காட்டி அவர் இவ்வாறு கூறினார். நடைமுறைக்கு வரும் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1988 (சட்டம் 342) இன் பிரிவு 18 ன் படி ஏறும் பகுதியை மூடுவதற்கு அமைச்சு உத்தரவு பிறப்பித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.