NATIONAL

வேலைக்கான நேர்முகத் தேர்வை நடத்த அரசாங்கம் அனுமதி- இஸ்மாயில் சப்ரி

17 ஜூன் 2020, 7:22 AM
வேலைக்கான நேர்முகத் தேர்வை நடத்த அரசாங்கம் அனுமதி- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, ஜூன் 17:

அரசாங்க இலாகாகள் அதன் கீழ் செயல்படும் நிறுவனங்கள், மற்றும் தனியார் துறைகள், வேலைக்கான நேர்முகத் தேர்வை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கின்றது. இந்த நடவடிக்கையினால், அனைத்து தரப்பினரும் பங்கேற்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், முன்னதாக நடத்தப்பட்ட இயங்கலை வழியான நேர்காணலுக்கு தற்போது அவசியமில்லை என்றும், மூத்த அமைச்சருமான டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

"நேர்முகத் தேர்வை நடத்த செயல்பாட்டு தர விதிமுறை எஸ்.ஒ.பியை பொதுச் சேவை ஆணையம் தயார்ப்படுத்தும். இந்த எஸ்.ஒ.பியை மலேசிய சுகாதார அமைச்சு பரிசீலிக்கும். தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் வழங்கும்", என்று அவர் மேலும் தெரிவித்தார். ஒப்புதல் வழங்கப்படும் எஸ்.ஒ.பி-யை, நேர்முகத் தேர்வை மேற்கொள்ளும் அனைத்து அமைச்சுகளும் நிறுவனங்களும் அதனை வழிகாட்டியாக பின்பற்ற வேண்டும் என்றும் இஸ்மாயில் சப்ரி வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.