தெமர்லோ, ஜூன் 15:
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தவு, பிகேபி அமல்படுத்தப்பட்டது முதல், மின்சாரக் கட்டணம் உயர்வுக் கண்டிருப்பது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து, எரிசக்தி மற்றும் இயற்கைவள அமைச்சுவிடம், தெனாகா நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான், இன்று விளக்கமளித்திருக்கிறார்.
பிகேபி காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க தெனாகா நேஷனல், டிஎன்பி உயர் நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக, எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்திருக்கிறார்.
இவ்விவகாரத்திற்கு தீர்வுக் காணுவது தொடர்பில், நாளை செவ்வாய்க்கிழமை மற்றொரு சந்திப்புக் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பகாங், தெமர்லோவில், திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், டிஎன்பி எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்பதாக, எரிசக்தி ஆணையிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெளிவுப்படுத்தினார்.
-- பெர்னாமா


