NATIONAL

ஜூலை 1 முதல் பாலர் வகுப்புகளை திறக்கலாம்

15 ஜூன் 2020, 7:10 AM
ஜூலை 1 முதல் பாலர் வகுப்புகளை திறக்கலாம்

புத்ராஜெயா, ஜூன் 15:

ஜூலை முதலாம் தேதி தொடங்கி, மழலையர் மற்றும் பாலர் பள்ளிகளைத் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது.

"மொத்த பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை அதாவது 6,216 பாலர் பள்ளிகள், 7,887 தனியார், 8,530 கெமாஸ் மற்றும் 1,781 ஒற்றுமை மழலையார் பள்ளிகளாகும்." என்று தற்காப்பு அமைச்சர், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

கல்வி அமைச்சு தாக்கல் செய்த அறிக்கையை ஆராய்ந்தப் பின்னர், திங்கட்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில், இன்று,திங்கட்கிழமை, மீட்புநிலை நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவான பிகேபிபி தொடர்பில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்மாயில் சப்ரி இத்தகவல்களைத் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.