NATIONAL

கோவிட்-19: 11 நாட்களாக எந்த மரணமும் ஏற்படவில்லை, புதிய சம்பவங்களை 20 !!!

2 ஜூன் 2020, 9:20 AM
கோவிட்-19: 11 நாட்களாக எந்த மரணமும் ஏற்படவில்லை, புதிய சம்பவங்களை 20 !!!
கோவிட்-19: 11 நாட்களாக எந்த மரணமும் ஏற்படவில்லை, புதிய சம்பவங்களை 20 !!!
கோவிட்-19: 11 நாட்களாக எந்த மரணமும் ஏற்படவில்லை, புதிய சம்பவங்களை 20 !!!

புத்ராஜெயா, ஜூன் 2:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,877 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 20 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை. தொடர்ந்து 11 நாட்களாக மரணம் ஏதும் ஏற்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 115-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 6 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 2 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 66 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,470 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 81.55 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.