NATIONAL

மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்கள் குறைந்துள்ளது; இது நல்ல தொடக்கத்திற்கான அறிகுறி- மந்திரி பெசார்

26 மே 2020, 1:53 PM
மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்கள் குறைந்துள்ளது; இது நல்ல தொடக்கத்திற்கான அறிகுறி- மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 27:

கோவிட் -19 தொற்று நோயின் ஒன்பது புதிய நேர்மறையான சம்பவங்கள் நேற்று  நண்பகல் வரை சிலாங்கூரில்  பதிவு செய்யப்பட்டுள்ளது ஒரு சாதகமான வளர்ச்சி என்று மாநில மந்திரி பெசார் விவரித்தார். " தொடர்ச்சியாக நான்கு நாட்கள் புதிய சம்பவங்கள் இரண்டு இலக்கங்களைப் பதிவுசெய்த பிறகு, இன்று ஒரு நேர்மறையான வளர்ச்சியாகும் " என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒன்பது சம்பவங்களில் மூன்று உள்நாட்டு பரிமாற்ற சம்பவங்கள். இவை ஒவ்வொன்றும் உலு லாங்காட், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற ஆறு சம்பவங்களில்  சவுதி அரேபியாவிலிருந்து ஐந்து மற்றும் ஒன்று ரஷ்யாவிலிருந்து இறக்குமதி சம்பவங்கள் ஆகும். அதே ஊடகம் மூலம் சிலாங்கூர் கோவிட் -19 தடுப்பு பணிக்குழு (எஸ்டிஎஃப்சி) இது ஒரு புதிய முறை என்று நேற்று 53 சம்பவங்களில் இருந்து கணிசமான வீழ்ச்சியுடன் மாநிலத்தில் மொத்தம் 1,838 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.