NATIONAL

கெடாவின் புதிய மந்திரி பெசார் நாளை பதவி ஏற்கிறார் !!!

16 மே 2020, 2:07 PM
கெடாவின் புதிய மந்திரி பெசார் நாளை பதவி ஏற்கிறார் !!!

அலோர் ஸ்தார், மே 16:

நாளை மதியம் 2 மணிக்கு அலோர் செடார் விஸ்மா டாருல் அமானில் நடைபெறும் பதவியேற்பு விழாவுடன், புதிய மந்திரி பெசாரயும் புதிய அரசாங்கத்தையும் கெடா மக்கள் பெறுவர் என தெரிகிறது. பெர்சத்து கட்சி பாக்காத்தான் கூட்டணியை விட்டு விலகிய பின்னர் பாக்காத்தான் மத்திய அரசாங்கம் வீழ்ச்சியைக் கண்டது. மாநில அளவில், முகிரீஸ் மந்திரி பெசாராக தன் நிலைப்பாட்டை பாதுகாக்க முடியவில்லை.

இரண்டு பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்களான டாக்டர் ராபர்ட் லிங் குய்  (சிடாம்) மற்றும் அஸ்மான் நஸ்ருதீன் (லூனாஸ்) ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறி, தேசிய கூட்டணிக்கு தங்களின் ஆதரவை அறிவித்ததை அடுத்து, முக்ரிஸ் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்தார். அதைத் தொடர்ந்து நான்கு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேறினர்.

கெடா சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் 23 கையெழுத்திடப்பட்ட உறுதிமொழிகள் புதிய மந்திரி பெசார் வேட்பாளரை முன்மொழிந்து கெடா சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அலோர் செட்டாரில், புதிய மந்திரி பெசார், பாஸ் கட்சியின் ஜெனெரி சட்டமன்ற உறுப்பினர் முகமட் சனுசி நோரின் பதவிப் பிரமாணம் செய்யும் விழாவுக்கான ஏற்பாடுகள் இன்று தொடங்கின.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.