NATIONAL

மாமன்னர் தம்பதியினர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்

16 மே 2020, 5:31 AM
மாமன்னர் தம்பதியினர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்

கோலா லம்பூர், மே 16:

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா ஆகியோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வியாளர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டனர். இந்த ஆண்டு தேசிய அளவிலான ஆசிரியர் தின கருப்பொருளான ‘அறிவார்ந்த ஆசிரியமே, புதிய தலைமுறையின் ஆக்கம்’ என்ற கருப்பொருளை மேற்கோளிட்டு பேசியுள்ளார்.

தேசிய கல்வி தத்துவத்தின் குறிக்கோள்களை பூர்த்தி செய்யும், புதிய தலைமுறையை உருவாக்குவதில் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கை இந்த கருப்பொருள் சுட்டிக் காட்டுகிறது. தேசிய அரண்மனையின் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் கணக்குகளில் இந்த பதிவினை மாமன்னர் தம்பதியர் பதிவிட்டுள்ளனர். மலேசியாவில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 16- ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.